இதோ அடுத்த தேர்தல் களத்தினை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்தியக் குடிமகன்களும் பரபரப்பாயிருக்கிற வேளையில் ஒரு அப்பாவி வாக்காளனின் கடடிதம்.ஆட்சியமைப்பதர்கான சாத்தியங்களை நமது அரசியல்வாதிகள் வெகு காலம் முன்பே அதன் சூட்சுமன்ங்களோடு புரிந்து கொண்டுவிட்டிருக்கிற்றார்கள். முன்பு சாதரண வாக்குறுதிகளோடு முடிந்து போகும் யுக்திகள் இன்று காலாவதியாகிவிட்டதால் அடுத்கட்டமாக பல்வேறு வழிகளை கையாளத்துவங்கிவிட்டிருக்கின்றனர்.சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட திருமங்கலம் சட்டமன்றதேர்தலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் அதனைப்பற்றியும் தற்போதுள்ள நிலை பற்றியும் பேச வேண்டும்.அடிப்படையில் எனது சொந்த ஊர் திருமங்கலம். சட்டமன்றதேர்தலின் போது சென்னையிலிருந்த என்னை நண்பர்களும் வீட்டிலிருந்தவர்களும் தொடர்ந்து அழைத்தபடியிருக்க தவிர்க்கமுடியாமல் செல்ல வேண்டியதாகிப்போனது .நல்லது,பின்பாக என்னென்ன கூத்துக்களை காண முடிந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. முதலிலலென்னை அச்சுறுத்திய விசயம் அங்கிருந்த சூழல் அதன்பிறகுதான் பணம்.ஊடகங்களும் போதாக்குறைக்கு ஒரே விசயத்தினை போட்டுத்தேய்க்க  யுத்தகளமாயிருந்தது ஊர்.இரண்டாயிரம் ரூபாயிலிருந்து நாகாயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது இரண்டாயிரந்தான்.வாக்காளர்களைத்தாண்டி அதிகம் சம்பாதித்தது பூத் ஏஜென்ட்களாயிருந்தவர்கள்தான்.90சதவிகித வாக்கு என்றதில் பலர் ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள. எனக்கு அது ஏன் நூறு சதவிகிதமாக வில்லை என்பதுதான் ஆச்சர்யம்?

                         ஏனெனில் வோட்டு அளிப்பதற்கு முன்பாகவே முடிவு சொல்லப்பட்ட தேர்தல் அது.இந்த முறை மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 'அண்ணன் அழகிரி அவர்கள்'வழக்கம்போலவே மூன்றரை லட்சம் வாக்குகளில் வெற்றி பெறுவாதாக சொல்லியிருக்கிறார்.நிச்ஸ்யமாக இதுவும் நடக்கும்தான், ஏனெனில் தேர்தலை நடத்துவதும் முடிவு அறிவிப்பதும் இவர்களேதான்.இங்கு சகிக்க முடியாத இன்னுமொரு காமெடி'வள்ளல் ஜே கே.ரித்தீஸ் அவர்கள்' ராமநாதபுரத்தில் போட்டியிடுவதுதான்.இந்த ந்வீன வள்ளலின் கடந்த காலங்களைப்பற்றின வதந்திகள் ஒரு புறம் இருக்கட்டும் இவர் திருனங்கலம் சட்டமன்றதேர்தலில் காட்டின அக்கறையைப் பற்றி சொல்ல வேண்டும். ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்த இவருக்கு தேர்தல் பணி செய்வதற்ககென்றே நுற்றுக்கணக்கானவர்கள் திருமங்கலத்திலிருந்து செல்கின்ரனர். காரணம் பணம் மட்டுமில்லை ஜாதியும்தான். வாழ்க ஜனநாயகம்.

மற்ற கூட்டனிகளைப் பற்றி சொல்வதற்கும் எராளமாயிருக்கின்றன,இவர்கள் ஈழப்பிரச்சனையில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிலிருந்தே தமிழர்களுகு இழைக்கும் துரோக்த்தினை தெரிந்து கொள்ளமுடியும்.தேர்தலை ஒட்டித்தான் உண்ணாவிரதங்களும் அறிக்கைகளும் பறந்து வந்து கொண்டிருக்கின்றன. சரியான பதி்களை எப்பொழுதும் மக்கள் கொடுப்பார்கள் என்பதெல்லாம் பழைய கதை இனி எல்லாம் பணம் தீர்மானிப்பவைதான்.நடந்த யாவற்றையும் மறக்கச் செய்வது எப்படியென நமது அரசில்வாதிகளுக்குத்தெரியும். சுலபமாக மறப்பது எப்படியென மக்களுக்கும் தெரியும்.

வாக்களிக்கப்போகும் முன் ஒரெயொருமுறை நம் ஈழத்து சகோதரர்களை  நினைக்க முடிந்தால் யாருக்கு வாக்களிப்பதென தீர்மானிக்க எளிமையாயிருக்கும்.ஒரு சராசரி மனதனாக கூட இருக்க முடியத துரதிர்ஸ்டசாலிகளில்லை நாம்.வாக்கே போட வேணடாம் என்பது என்னுடைய முடிவு உங்களுடையதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.......

                                   இப்படிக்கு

  ஒன்னுந்தெரியாத வாக்காளன்.

0 Responses to " "

வெயில் காலத்தின் பசி மிக்க வல்லூறுகளைப் போல் தேடிச் சோறு நிதந் தின்றவன். சொந்த ஊரென பேருக்கு மதுரையை சொல்லிக் கொள்ளலாம்.உண்மையில் எனக்கு சோறு போட்ட எல்லா ஊர்களுமே சொந்த ஊர்கள்தான். இலக்கியம் வாழ்வின் மீதான நம்பிக்கையை தந்திருப்பதோடு நண்பர்களையும் தந்திருக்கிறது.நீலநதி முதல் சிறுகதைத் தொகுப்பு..தற்சமயம் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநர்.