ஒரு நாடோடியின் நாட்குறிப்புகள்.

Written by saravanakumar lakshmi on Monday, April 13, 2009 at 5:37 AM

  எல்லாவற்றுக்கும் பின்னால் என்னை அர்த்தப்படுத்திக்கொண்டிருப்பது என்னுடைய பயணங்கள்தான். இலக்கற்று சுற்றித்திரிந்த நாட்களிலெல்லாம் நான் கற்றுக்கொள்ள நேர்ந்த விசயங்கள் ஏராளம்.அப்படி பார்த்த பழகின எவ்வளவோ தினங்களை மனிதர்களைப்பற்றின குறிப்புகளைத்தான் எழுத விரும்புகிறேன்.இலக்கிய நண்பர்கள் தெரிந்த தெரியாத மனிதர்களென என் கதைகளைப் போன்றே அவற்றுக்கும் திசைகளில்லை........

                   தனுஷ்கோடியில் சில நாட்கள்......

                              எந்த வயதில் என்றும் எப்ப்டியென்றும் தெரியாத ஒரு ப்ந்தம் எனக்கு

தனுஷ்கோடியுடன் ஏற்ப்ப்ட்டது.பல நாட்களாக அங்கு போக வேண்டுனென்கிற என் விருப்பம் இருபத்தி இரண்டு வயதில்தான் கிடைத்தது.ஏதேதோ எதிர்பார்ப்பில் சென்றவனுக்கு சிதிலமுற்ற ஒரு கடற்கரையைப் பார்க்கவும் முதலில் சொல்லமுடியாத ஏமாற்றம். அடுத்த முறை அங்கு செல்லப்போவதில்லையென மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் அப்படி இருக்க முடியவில்லை.திரும்பி வந்த சில தினத்திலேயே இனம் புரியாததொரு எண்ணம் தொடர்ந்து அவ்வூரைப் பற்றி நினைக்கச் செய்துகொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திரும்பவும் அங்கு செல்ல நேர்ந்த பொழுது வேறுவிதமான ஊராய் பட்டதுடன் மிக நெருக்கமான சொந்தம் இருப்பதைப் போல் உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் கரைக்கு வரும் அலைகலைப் பிடித்து விளையாடுவதற்கென்று அழிந்து போன ஊரின் பழைய குழந்தைகள் காத்துக்கிடப்பதைப் போன்றிருக்கும்.கடலில் இழுத்துச் செல்லப்பட்ட ரயிலிலிருந்த குழந்தைகள் கடைசியாய் என்ன பாடல்களைப் பாடியிருக்கும்.ஒவ்வொரு நிறுத்ததிலும் நின்றிருந்த குழந்தைகளுக்கு இவர்கள் கைகாட்டியதைப் போல் இவர்களுக்கு யார் கை காட்டியிருப்பார்கள்.எதுவுமே சந்தோச மானதாக இல்லை. எனக்கு விருப்பமானதொரு பாடலை அவர்களுக்காகப் பாடுகிறேன்.பெரும் அழிவின் சாட்சியாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும'் காளி'... அவரின் பாடல்களில் உயிர் கொள்கிறது மீன் வாசமும் சகல நாட்டு வணிகர்களின் குரலும்.பல காலங்கலாக வெட்டப்படாத அவரின் வெண்மயிர்கள் கடந்து போன காலத்தின் சாட்சிகளாய் நீண்டு கொண்டிருக்கின்றன.

                         ராமேஸ்வரத்தி்ல் ஏற்றிக்கொண்ட பேருந்து பெரும் தயக்கத்திற்குப் பின் சத்திரத்தில் இறக்கிவிட்டுச்செல்கிறது. ஒரு துறவியைப் போல் சுழன்ற காற்று பெரும் மூர்க்கத்துடன் அணைத்துக்கொள்கிறது.நான் மட்டுமில்லை என்னோடு இன்னும் சிலர் சுற்றிப்பார்க்கும் ஆர்வத்திலும் எந்த விதமான உணர்வுகளுமின்றியும் இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.முதல் முறை பார்க்கும் சிலருக்கு என்ன இருக்கிரதென்ற ஏமாற்றம். சத்திரத்திலிருந்து கூட்டிப்போக வேன்காரர்கள் வரிசயாய் நிற்கிறார்கள். எதையும் பொருட்படுத்தாமல் மணலில் நடந்து சென்று கொண்டிருக்கிறேன் சொந்த ஊர்க்காரன்போல்.மதிய உணவிற்கென என்னிடம் எதுவுமில்லை அதனை ஒருபோதும் பொருட்படுத்துவதுமில்லை.காளி அய்யாவைத் தேடிச்செல்கிறேன் வழக்கம் போலவே இன்றும் புதிதாய் அறிமுகப் படுத்திக்கொல்ள வேண்டுமோவென்கிற தயக்கம்,அதிசயமாக என்னை நினைவு வைட்ய்திருக்கிறார். கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம் பிறகு வழக்கம் போல் நடந்து திரிகிறேன் ஏனென்று புரியாதவனாய்.

               சில வருடங்கள் தொடர்ச்சியாக அங்கு போய்வருவதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப்புரிகிறது. த்னுஷ்கோடி தனியான ஊரில்லை மிக நீண்ட வணிகப் பாரம்பரியமும் கலாச்சார தொடர்ச்சியும் அங்கிருந்து நமக்குக்கிடைக்கிறது.இன்று வரையிலும் சொல்லப்பட்டு வரும் குமரிக்கண்டத்தின் ஒரு நீட்சியாகத்தான் அதனைப் பார்க்க வேண்டும்.ஒரு ஆச்சர்யமான உண்மையை அங்கு செல்கிற யாவரும் உணராலாம் கடற்கரையில் அப்படியொரு அற்புதமான குடிநீர். அதுவும் இரண்டு மூன்று அடிகளுக்குள்ளாகவே,கடற்கரை தாகத்திற்கெனறே உருவாகியிருக்கும் போல்.. முடிவு பெறாத ஒரு ஏக்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது, சில இரவுகளாவது அங்கு தங்கி வரவேண்டும் என்பதுதான் அது,பார்க்கலாம் அடுத்த முறையோ அத்ற்கடுத்த முறையோ அது நடக்கும் என்றுதான் வழக்கம் போல் இப்பொழுதும் சமாதானம் சொல்லிக்கொல்கிறேன்...............

0 Responses to "ஒரு நாடோடியின் நாட்குறிப்புகள்."

வெயில் காலத்தின் பசி மிக்க வல்லூறுகளைப் போல் தேடிச் சோறு நிதந் தின்றவன். சொந்த ஊரென பேருக்கு மதுரையை சொல்லிக் கொள்ளலாம்.உண்மையில் எனக்கு சோறு போட்ட எல்லா ஊர்களுமே சொந்த ஊர்கள்தான். இலக்கியம் வாழ்வின் மீதான நம்பிக்கையை தந்திருப்பதோடு நண்பர்களையும் தந்திருக்கிறது.நீலநதி முதல் சிறுகதைத் தொகுப்பு..தற்சமயம் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநர்.