மன்னிப்பவர்களே மன்னிக்கப்படுகிறார்கள்

Written by saravanakumar lakshmi on Monday, April 13, 2009 at 1:04 AM

மன்னிப்புகளற்ற குற்றங்களென ஒன்றுமில்லை

நீங்கள் விரும்ப நேர்கிற பெண்

பிரிதொருவரின் மனைவியாயிருக்கலாம் 

இறைடச்சல் மிகுந்த வீதியின் 

இயக்கம் ஸ்தம்பிக்கும்படி 

நிர்வாணமாய் ஓடும் பெண்ணின் உடலில் 

தாராளமாக சில நிமிடங்கள் 

கவனம் செலுத்டலாம் 

நேரடியாகவோ மறைமுகமாகவோ 

செய்துவிட நேர்கிற கொலைகளில் 

பெரும்பாலும் உங்களின் பங்கென்பது 

வெகு சொற்பமே 

அனுமதியின்றி மழைபெய்வதைப் போல 

மரங்களின் வழக்கமான 

இயக்கத்தினைப்போல 

எல்லாமே இயல்பானதுதான் 

குற்றங்களனைத்தும் 

தாமாகவே நடந்து விடுபவைகளாகத்தானிருக்கின்றன 

இங்கு தண்டனைகள் அபத்தம் 

அனாவசியமும் கூட 

ஏனெனில் 

மன்னிப்பவர்களே மன்னிக்கப்படுகிறார்கள்.....

1 Responses to "மன்னிப்பவர்களே மன்னிக்கப்படுகிறார்கள்"

Comment by வெய்யில்
April 30, 2009 at 8:33 AM #  

வாழ்த்துகிறேன் நண்பா... நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.


நிறைய அன்புடன்
வெய்யில்

வெயில் காலத்தின் பசி மிக்க வல்லூறுகளைப் போல் தேடிச் சோறு நிதந் தின்றவன். சொந்த ஊரென பேருக்கு மதுரையை சொல்லிக் கொள்ளலாம்.உண்மையில் எனக்கு சோறு போட்ட எல்லா ஊர்களுமே சொந்த ஊர்கள்தான். இலக்கியம் வாழ்வின் மீதான நம்பிக்கையை தந்திருப்பதோடு நண்பர்களையும் தந்திருக்கிறது.நீலநதி முதல் சிறுகதைத் தொகுப்பு..தற்சமயம் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநர்.