அபபா இறந்து போனார் 

இத்ற்கு முன்பு அழாதிருந்தவாறுதான் 

இன்றுமிருக்கத்தோன்றியது 

மிகச்சிறிய இரண்டு குச்சிகளை 

யாரோ 

என் இமைகளில் பொறுத்துகின்றனர் 

அழச்செய்துவிடும் பொருட்டு 

இப்பொழுது 

சிரிக்கத்தான் முடிந்தது 

துயர்மிகுந்த இந்தச் சப்தங்களால் 

அப்பாவின் உறக்கம் 

களையக்கூடுமென 

சுற்றியிருந்தவர்களின் அழுகையை 

நிறுத்தச்சொன்னேன் 

பெரும்பாலனவர்களுடைய எதிர்பார்ப்பும் 

நானழுவது குறித்தே இருந்திக்க வேண்டும் 

அவ்வப்பொழுது 

தீவிரமாயென்னை அவதானித்தபடியிருந்தனர் 

ஒருபோதும் அவர்களால் 

புரிந்துககொள்ள முடியாது 

என்னால் அழமுடியாதென்பதை 

அபபாவின் உடல் தூக்கிச்செல்லப்பட்ட 

வீதிகள்தோறும் என்னைப்போன்றே 

சிரித்து உதிர்ந்து கிடந்தன 

ரோஸ் நிற மலரிதழ்கள்

யாவரும் உறங்கிப்போன பின்னிரவில் 

நானும் அப்பாவும்  

உரையாடிக்கொண்டிருந்தோம் 

மரணம் எப்படியிருக்குமென......

0 Responses to " "

வெயில் காலத்தின் பசி மிக்க வல்லூறுகளைப் போல் தேடிச் சோறு நிதந் தின்றவன். சொந்த ஊரென பேருக்கு மதுரையை சொல்லிக் கொள்ளலாம்.உண்மையில் எனக்கு சோறு போட்ட எல்லா ஊர்களுமே சொந்த ஊர்கள்தான். இலக்கியம் வாழ்வின் மீதான நம்பிக்கையை தந்திருப்பதோடு நண்பர்களையும் தந்திருக்கிறது.நீலநதி முதல் சிறுகதைத் தொகுப்பு..தற்சமயம் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநர்.